தேங்காய் விற்கும் போர்வையில் போதைப்பொருள் வர்த்தகம்! சிக்கினார் பிரான்ஸ் வர்த்தகரின் உதவியாளர்
Police
Sri Lanka
Arrest
By Vasanth
கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் தேங்காய் விற்கும் போர்வையில், ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்போது, அவரிடமிருந்து 1 கிலோ 152 கிராம் அளவுடைய ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர், தேங்காய் விற்பனையில் ஈடுபடும் போர்வையில், ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கைதானவர், பிரான்ஸில் தங்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.