ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கிழக்கு தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் 5.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாகக் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் இப்பாராகி பிராந்தியத்தில் சுமார் 70 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுனாமி குறித்த எச்சரிக்கை
எனினும் குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி குறித்த எச்சரிக்கை இல்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[HY897H]
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்ட போதிலும், பின்னர் அவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் தளபாடங்கள் விழுந்ததாலும், மக்கள் பீதியடைந்து வெளியேற முயன்றதாலுமே பெரும்பாலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.