சாரா உயிருடன் உள்ளாரா? இன்டபோலுக்கு செல்லவுள்ள சிவப்பு அறிக்கை
கட்டுவாபிட்டி தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் அவர் கொல்லப்படவில்லை என்றால் சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிக்கை அனுப்புவோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக விசாரணை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார். "சாரா என்பவர் கொல்லப்பட்டாரா என்று தெரியாது.
சாராவின் தாயுடன் செய்யப்பட்ட DNA சோதனையில் ஒத்துப்போகவில்லை.
அதனால் மீண்டும் சோதனை செய்ய எதிர்பார்த்துள்ளோம். அதன்மூலம் உண்மையை கண்டறிய முடியும்" என சரத் வீரசேகர தெரிவித்தார்.
அபூபக்கர் என்ற பொலிஸ் அதிகாரி சாராவை தப்பிக்கச் செய்ததாகவும் அதனை என்டனி என்பவர் நேரில் கண்டதாகவும் கூறப்படும் தகவல் உண்மையா என சரத் வீரசேகரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "இது குறித்து விசாரணை செய்தோம்.
Tags : #Easter #Death #Sarath Weerasekaraஅதனை உறுதிப்படுத்தும் சாட்சி கிடைக்கவில்லை. சாரா கொல்லப்படவில்லை என்றால் சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிக்கை அனுப்புவோம்.
வௌிநாட்டில் கைது செய்யப்பட்ட 54 பேரில் 50 பேர் இதுவரை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்" என்றார்.