உயிர்த்தஞாயிறு தாக்குதல் - புதிய தகவலை வெளியிட்ட கர்தினால்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதத்தால் நடத்தப்படவில்லை என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பொரளையில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை ஆசீர்வதித்து திறக்கும் விழாவில் உரையாற்றிய கர்தினால், அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக தூண்டப்பட்டதே இந்த தாக்குதல் எனத் தெரிவித்தார்.
"எங்கள் சகோதரர்கள் மத தீவிரவாதத்தால் தாக்கப்படவில்லை. அரசியல் சக்தியை வலுப்படுத்த மத தீவிரவாதம் பயன்படுத்தப்பட்டது ”, என்றார்.
"இந்த தாக்குதலில் நாம் காண்பது மத தீவிரவாதம் அல்ல, ஆனால் சில குழுக்கள் அரசியல் அதிகாரத்தை பலப்படுத்த முயன்றதன் விளைவாகும்", என அவர் மேலும் கூறினார்.
இலங்கையில் 2019 ல் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் மீது ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கர்தினால் இன்று பொரளை மற்றும் மாதம்பிட்டிய கல்லறைகளில் இரண்டு நினைவுச்சின்னங்களை திறந்து வைத்துள்ளார்.