P2P பேரணியின் எதிரொலி- தொடர்ச்சியாக விசாரணைக்குள்ளாகும் பிரமுகர்கள்!
Investigation
Police
Mullaitivu
P2P
By Vasanth
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு பொலிஸார் அழைத்துள்ளனர்.
நேற்று அழைப்பாணையுடன் ரவிகரனின் வீட்டிற்கு முல்லைத்தீவு பொலிஸார் சென்றிருந்தனர். பொலிஸார் சென்றபோது ரவிகரன் வீட்டில் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் இன்று விசாரணை ஒன்றினை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையம் வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் தொலைபேசி மூலம் ரவிகரனை அழைத்திருந்தனர்.
அந்தவகையில் பொலிஸாரின் அழைப்பினை ஏற்று ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில், தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி