கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது : பந்துல குணவர்தன எச்சரிக்கை!

International Monetary Fund Bandula Gunawardane Sri Lanka Development
By Beulah Nov 21, 2023 03:22 PM GMT
Report

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பணிகள் வெற்றிப்பெற்றால் தான் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை இனி முன்னெடுக்க முடியும் என போக்குவரத்து, ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வேளையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் உரையாற்றுகையில்,

இஸ்ரேல் - இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானம்!

இஸ்ரேல் - இலங்கைக்கிடையிலான ஒப்பந்தமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானம்!

வீதி அபிவிருத்தி

“100,000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ்13,160 வீதிகளின் (10848 கிலோ மீற்றர்) அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது : பந்துல குணவர்தன எச்சரிக்கை! | Economic Solution Not Political Solution Bandula

இந்த கருத்திட்டத்தின் கீழ் இதுவரை 5201 வீதிகளின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில் 7959 வீதிகளின் பணிகளின் அபிவிருத்தி பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒப்பந்தகாரர்களுக்கு இதுவரை 168.3 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது,5 பில்லியன் ரூபா செலுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட கடன் தொகையை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெறவுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது : பந்துல குணவர்தன எச்சரிக்கை! | Economic Solution Not Political Solution Bandula

பொருளாதார மீட்சிக்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் வெற்றிப்பெற்றால் தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 48 மாத கால கடன் ஒத்துழைப்பை வழங்குவதை இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை துரதிஸ்டவசமாக தோல்வியடைந்து, கடன் மறுசீரமைப்பும் தோல்வியடைந்தால் எவராலும் இந்த நாட்டை ஒருவாரத்துக்கு கூட ஆட்சி செய்ய முடியாது.

இதுதான் உண்மை. ஆகவே நாட்டு மக்களுக்கு அரசியல் தரப்பினர் உண்மையை குறிப்பிட வேண்டும்.” என்றார்.

இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுச் சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025