சி.ஐ.டியிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
புதிய இணைப்பு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (07) பிற்பகல் 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி நிதியம்
இதேவேளை 2008 முதல் 2024 வரைான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்ற விசாரணை பிரிவால் அண்மையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்தப் பணம் பெறப்பட்டது தொடர்பான 22 கோப்புகள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கோப்புகள் தொடர்பாக 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தொகைகளில் 100 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையிலே குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மைத்திரி பால சிறிசேன சிஐடியில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
