புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு செய்யலாம் என பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari,) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எண்ணை அழைத்து முறைப்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை காலை 9.30 மணிக்கு தொடங்கும். இருப்பினும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை மையங்களில் இருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும், இரண்டாவது வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இரண்டாவது வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, அரை மணி நேர இடைவேளைக்கு பின்னர் முதல் வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேர கால அளவு கொண்டது.
சிறப்பு திட்டம்
அதன்படி, அந்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிகிறது. அதன்படி, முழு பரீட்சை மதியம் 12.15 மணிக்கு முடிவு பெறும்.
தேர்வின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற எண்ணை அழைத்து முறைப்பாடு அளிக்கலாம்.
இதற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எம். இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
