சடுதியாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி - காரணத்தை வெளியிட்ட பொருளியல் நிபுணர்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது தற்காலிகமான ஒன்றென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக வங்கி வழங்குவதாக உறுதி அளித்த 400 மில்லியன் டொலர் உதவியும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சடிக்கும் ரூபா
சிறிலங்கா அரசாங்கம் அச்சடிக்கும் ரூபாவின் அளவு குறைவடைந்துள்ள அதேவேளை, பிணை முறிகளையும் அரசாங்கம் மீண்டும் விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அதில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்