யாழில் மின்னல் தாக்கி ஆணொருவர் உயிரிழப்பு
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்து கொண்டிருந்தார். இதன்போது மின்னல் அவர்மீது தாக்கியது.
இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று (07) பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
சம்பத்தில் 43 வயதுடைய 8ம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசாரணை
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேச பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
