தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு

Colombo Sri Lanka Police Investigation
By Rakesh Aug 30, 2026 01:20 AM GMT
Report

கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தெரியவருகையில்,  கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள்

ஹேர்மூஸில் நீடிக்கும் பதற்றம்! இலங்கை கடல் எல்லையில் 20 ஈரானிய கப்பல்கள்

முதலை தாக்கியதற்கான காயங்கள்

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.

தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு | Father Dies In Crocodile Attack

பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை

சர்வதேச கடன் மதிப்பீட்டு தொடர்பில் ஹர்ஷ வெளிப்படுத்திய திட்டமிடல் பொறிமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026