வேலைக்கு சென்ற நிலையில் காணாமல் போன கணவன்: உதவியை நாடும் சம்மாந்துறை காவல்துறையினர்
Sri Lanka Police
Missing Persons
Sri Lanka Police Investigation
By Pavi
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி சம்மாந்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபர் வேலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், குடும்பத்தினர் அவரைத் தேடி வருகின்றனர்.
சம்மாந்துறை காவல் நிலையம்
காணாமல் போன அமீர் அலி பாரிஸ் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் அல்லது அவரை கண்டவர்கள், சம்மாந்துறை காவல் நிலையத்தை +94 67 226 0222 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |