தமிழரின் அவலங்களை ஓவியம் மூலம் வெளிப்படுத்தி முதலிடம் பிடித்த ஈழத்தமிழ் சிறுமி
Switzerland
Sri Lanka
Drawing
By Vasanth
ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை தனது ஓவியத் திறமை மூலம் வெளிப்படுத்தி முதலாம் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளார் ஈழத்து தமிழ் சிறுமியான அபிர்சனா. சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியிலேயே அவர் இந்த முதலாம் பரிசினை பெற்றுக் கொண்டார்.
இலங்கைத் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் நாட்டிலுள்ள வங்கியொன்று தனது 19ஆவது ஆண்டு நிறைவையொட்டி இசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் போட்டியை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்ரியாவின் தலைநகரில் நடத்தியது.
இதில், ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு எனும் ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஓவியமொன்றை வரைந்து பரிசைப் பெற்றுள்ளார்.