தொலைபேசி உரையாடலின்போது ஏற்பட்ட விபரீதம் - உயர் அழுத்த மின்சாரத்தால் படுகாயம்
தமிழகத்தில் உயர் அழுத்த மின் வடத்தின் அருகே நின்று தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளம்பெண் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
குறித்த பெண் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார வடம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அவர் தனது தொலைபேசியை தனது மின்னேற்றி மூலம் மின்னேற்றிக்கொண்டு உரையாடும் வேலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஏனைய பெண்கள் மீதும் மின்சாரம்

உலர்த்த பட்ட ஆடை ஒன்று வடத்தின் மீது விழுந்ததை அடுத்து அதை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, உயர் அழுத்த மின்சார வடத்தில் இருந்து குறித்த பெண் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது அந்தக் கட்டடம் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் விடுதியிலிருந்து ஏனைய பெண்கள் மீதும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்