மக்களின் கழுத்தை நெரிக்கும் வரவுசெலவு திட்டம் சற்றுமுன் நிறைவேற்றம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு 41 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
வரவு செலவு திட்டத்துக்கு எதிராக 81 பேர் வாக்களித்திருந்ததுடன் 01 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
இதன் பிரகாரம் மேலதிகமாக 41வாக்குகளால் வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் நிறைவேற்றப்பட்டது.
அதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன், சாணக்கியன் சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அத்துடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீவி விக்கினேஸ்வரன் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.