மத்திய கிழக்கு மோதலுக்கு மத்தியில் இலங்கை வரும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல்!
Sri Lankan Peoples
Crude Oil Prices Today
Middle East
Crude Oil
By Dilakshan
மத்திய கிழக்கு மோதல் வெடித்த பிறகு, இலங்கைக்கு வருகை தரும் முதலாவது கச்சா எண்ணெய் தாங்கி கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சுமார் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றி வரும் இந்த கப்பலைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் மற்றுமொரு கப்பலும் வருகை தர உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முழுமையான தீர்வு
மேலும், அமெரிக்காவிலிருந்து 'டபிள்யூ.டி.ஐ' (WTI) வகை கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன் மூலம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை சந்தித்து வந்த கச்சா எண்ணெய் விநியோக சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |