இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்த ரஷ்யா!
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது நேரடி விமானமான அஸூர் ஏர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நீர் பீரங்கி வணக்கங்களுடன் வரவேற்கப்பட்டுள்ளது.
332 பயணிகளை கொண்ட இந்த விமானம் இன்று (01) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது
நேரடி விமான சேவை
நீர் பீரங்கி வணக்கங்களுடன் விமானம் முதலில் வரவேற்கப்பட்டு, பின்னர் விமானத்தில் வந்திருந்த பயணிகள் பாரம்பரிய கண்டிய நடன நிகழ்ச்சியுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

அதன்படி இன்று முதல் ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி பட்டய விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது .
மேலும், அஸூர் ஏர் நிறுவனம், ரஷ்யாவின் வெனுகோவ், டோல்மோசேவ், கிரானோயார்ஸ்க் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் இருந்து வாரத்திற்கு நான்கு விமானங்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening