நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள தம்பலகாமம் விவசாயிகள்
திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட கோயிலாற்றுவெளி விவசாய நிலப் பகுதியில் நெல் அறுவடை தற்போது இடம் பெற்று வருகின்ற போதிலும் இம் முறை சிறுபோகச் செய்கை அறுவடையில் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியில் சுமார் 1300 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடை இடம் பெற்று வருகின்றது.
இதுதொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கயைில்,
நிர்ணய விலை

“தங்களுக்கான நெல் கொள்வனவில் நிர்ணய விலை இன்மை, வெட்டுக் கூலி அதிகம், விளைச்சல் குறைவு என பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளோம்.
தனியார் உரிமையாளர்களே நெல்லை கொள்வனவு செய்கின்றனர். நிர்ணய விலை இன்மையால் பாரிய நஷ்டம் மற்றும், இலாபமற்ற அறுவடையே எஞ்சியுள்ளது.
அரசாங்கம் இதற்கு சாதகமான பதில்களை விவசாயிகளுக்கு வழங்கி நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும்.
அரக்கொட்டியான் அடித்து ஒரு வகை மஞ்சல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளமையால் விளைச்சல் குறைவடைந்துள்ளது.
மானிய அடிப்படையிலான விவசாயிகளுக்கான பசளையும் குறைவாகவே கிடைத்துள்ளன.
இதனால் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, பரம்பரை பரம்பரையாக செய்து வந்த விவசாயத்தை தற்போது கைவிடுவோமா என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே நிர்ணய விலையை பெற்றுத் தாருங்கள்” என்கின்றனர்.



