வான் சாகச நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கிய விமானம் : ஸ்தலத்திலேயே உயிரிழந்த விமானி (காணொளி)
தென்னாபிரிக்காவின் (South Africa) சால்தானா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுருந்த விமான சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட விமானி ஒருவர் பலியாகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் சால்தானா பகுதியில் கடந்த 21ஆம் திகதி விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அனுபவம் மிக்க, திறமையான விமானிகள் விமானங்களில் அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.
விமான சாகச நிகழ்ச்சி
அந்த வகையில், விமான சாகச நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயர பறந்து விமானத்தை சுழற்றினார்.
அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகவேகமாக கீழே விழுந்து நொறுங்கியது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மீட்பு படையினர் விபத்துக் களத்திற்கு விரைந்து சென்றனர்.
Zapped by EMP
— Manatat Waiwong (@ManatatW) March 24, 2025
South Africa, a pilot died as the aircraft crashed during the West Coast Air Show in Saldanha Bay May 22, 2025 pic.twitter.com/UA2tlqgXS2
பிறகு, விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர். எனினும், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 22 மணி நேரம் முன்
