சட்டவிரோதமான முறையில் போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு ரூ. 360000 அபராதம்
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பேருந்து வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இதன்படி அம்பாறை கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய மூவருக்கும் தலா 120,000 ரூபா வீதம், மொத்தம் 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம்) ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை போக்குவரத்து காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் காவல்துறை பரிசோதகர் (CI) தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த பேருந்துகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு கல்முனை தலைமையக போக்குவரத்து காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |