குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை : உடன் பணியில் அமர்த்தப்பட்ட நீதிபதி
கொழும்பு கோட்டை நீதிபதியாகப் பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோசல சேனாதீராவை உடனடியாகப் பணியில் இணைக்க நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, ஊதியப் பாக்கியுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம்
தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரத்தையும் நீரையும் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,சேனாதீராவின் பணியை 10, 2024 முதல் பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பிரதம நீதிபதி தலைமையிலான நீதித்துறை சேவை ஆணைக்குழு, 27 மாத காலத்திற்கு 20க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்த நீண்ட மற்றும் முறையான விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது.
கோசல சேனாதீரா நீதித்துறையில் மிக மூத்த சிறப்பு நிலை நீதிபதியாகவும் பணியாற்றுகிறார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |