யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா: மறைந்த நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் தனுஷ்காவிற்கு

Jaffna University of Jaffna Education
By Theepan Oct 07, 2026 07:36 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய கௌரவமான 'சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஒன்பது அமர்வுகளாக நடைபெற்று வரும் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாளான இன்று (07.10.2026), இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கம் மாணவி தனுஷ்காவிற்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

சற்றுமுன் ஷிரந்தி ராஜபக்ச அதிரடியாக கைது - அடுத்தடுத்து திருப்பங்கள்: விசாரணைகள் ஆரம்பம்

கொடூரமாகச் சுட்டுப் படுகொலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் கல்வி பயின்று, சமூகத்தின் குரலாக ஒலித்த இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன்.

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா: மறைந்த நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் தனுஷ்காவிற்கு | Nilakshan Memorial Gold Medal Awarded To Dhanushka

கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 1ஆம் திகதி அதிகாலை வேளையில், நடைமுறையிலிருந்த கடுமையான இராணுவ ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில், அவரது வீட்டில் வைத்து பெற்றோரின் கண்முன்னாலேயே ஆயுததாரிகளால் கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அன்னாரின் நினைவை என்றென்றும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு, யாழ். இந்துக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களான அவரது சக பாடசாலை நண்பர்களால் “நிலா நிதியம்” உருவாக்கப்பட்டது.

இந்நிதியத்தின் ஊடாக, யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக இத்தங்கப் பதக்கம் வழங்கி வைக்கப்படுகின்றது.

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை : நீதிமன்றின் உத்தரவு

மாணவி தனுஷ்காவின் நெகிழ்ச்சியான பதிவு

தமக்குக் கிடைத்த இந்த உயரிய விருது குறித்துப் பகிர்ந்துகொண்ட மாணவி தனுஷ்கா சஞ்ஜீவ, தனது உணர்வுகளைப் பின்வருமாறு வெளிப்படுத்தினார்:

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழா: மறைந்த நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் தனுஷ்காவிற்கு | Nilakshan Memorial Gold Medal Awarded To Dhanushka

"சமூகத்தின் கண்ணாடியாகவும் மக்களின் குரலாகவும் திகழும் ஊடகங்களின் இயல்பையும், அதன் தாக்கத்தையும் எனக்கு ஆழமாகக் கற்றுத்தந்த ஊடகக் கற்கைகள் துறைக்கு முதற்கண் எனது நன்றிகள்.

விரிவுரையாளர்களின் வழிகாட்டல்களும், ஊடகத் துறைசார் ஆளுமைகளின் அனுபவப் பகிர்வுகளுமே எனது அறிவுப்புலத்தை மேலும் விஸ்தரிக்க உதவின. "எனது கல்விக்கும், இலட்சியப் பயணத்திற்கும் எப்போதும் உற்ற துணையாக நிற்கும் எனது பெற்றோர் மற்றும் கணவருக்கும், என்னை முன்னகர்த்திய ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.

குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் இந்த மதிப்பார்ந்த தங்கப் பதக்கத்திற்கான நிதியத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கி, ஊடகத்துறையில் சாதிக்கும் மாணவர்களைக் கௌரவிப்பதற்குரிய உயர்ந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த ‘நிலா நிதியம்’ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு

அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025