மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரான ஜகத் திலகசிறி பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர் இலஞ்சச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ், அச்சட்டத்தின் இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் இலஞ்சச் சட்டத்தின் 23(அ)(1) பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஜகத் திலகசிறி பெரேராவை மேலதிக சட்ட சடவடிக்கைகளுக்காக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக நடவடிக்கை
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |