சிக்கிய போதைப்பொருள் கப்பல்! சஜித் அணியின் முன்னாள் உறுப்பினர் கைது
தெற்கு கடற்கரையில் போதைப்பொருளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிக் கப்பல் தொடர்பாக ஒருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
பன்னல பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்படையினர் சம்பந்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் நேற்று(20.11) பிற்பகல் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
மீன்பிடிக் கப்பல் மீட்பு
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீன்பிடிக் கப்பல் மீட்கப்பட்டது.

குறித்த கப்பலில் இருந்து 300 கிலோ ஹெரோயின், 100 கிலோகிராம் ஐஸ் மற்றும் 02 துப்பாக்கிகள் உட்பட 15 போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |