வன்னியில் இன்று இரவு இடம்பெற்ற சம்பவம் : நால்வர் கைது!
Mullaitivu
Sri Lanka Police Investigation
By Laksi
அனுமதிப் பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று(27) இரவு இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினரின் விசாரணை
சுதந்திரபுரம் பகுதியிலிருந்து பரந்தன் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி அனுமதிப் பத்திரங்கள் ஏதுமின்றி 33 மாடுகளை வீதியூடாக நடாத்தி கொண்டு சென்ற போது புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைவேலி பகுதியில் இடை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த நபர்களை கைது செய்துள்ளதுடன் மாடுகளையும் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்ககது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 10 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்