விஞ்ஞானபாட வினாக்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச புள்ளிகள்
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் (GCE OL exam) விஞ்ஞான பாடப் பரீட்சைத் தாளின் சில வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இம்முறை நடைபெற்ற விஞ்ஞான பாடப் பரீட்சைக்கான வினாத்தாள், பாடத்திட்டத்துக்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டு இருந்ததாக கல்வித்துறை சார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதன் காரணமாக பரீட்சை எழுதிய மாணவர்கள் பெரும் அசெளகரியத்தை எதிர்கொண்டிருந்தனர்.
இலவச புள்ளிகள்
இந்நிலையில், பரீட்சைத் திணைக்களத்தின் தவறுக்குப் பொறுப்பேற்று, விஞ்ஞான பாடப் பரீட்சைத் தாளின் சில வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |