இந்தியாவுக்கு பயணமானார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடானது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதி செய்தனர்.
கொரோனா தொற்று உறுதி
இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன் இந்திய வருகையை வெள்ளை மாளிகை உறுதி செய்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் அதிபர் ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை இன்று (8) நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.