சிறிலங்கா காவல்துறையை ஆட்டம் காண வைத்த செவ்வந்தி வகுத்திருந்த அடுத்த திட்டம்
நாட்டில் தற்போது பேசுபொருளாக இருக்கும் விடயம்தான் இஷார செவ்வந்தியின் கைது.
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்டவர்தான் இஷார செவ்வந்தி.
குறித்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிக்கு துப்பாக்கியை எடுத்து சென்று வழங்கியதாக அவர் வலைவீசி தேடப்பட்டார்.
இதனால், அவரை கண்டுபிடிப்பவர்களுக்கான பணத்தொகை வரையில் அறிவிப்பு வெளியிட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது இலங்கை அரசு.
இருப்பினும், அவர் மாலைத்தீவுக்குத் (Maldives) தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி தொடர்ச்சியாக மாதம் கடந்தது.
இந்த பிண்னனியில் எட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது நேபாளத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் அடுத்த கட்டம், தொடரும் விசாரணைகள், அவரின் வெளிநாட்டு பயணம் மற்றும் விசாரணைகளின் முழுமையான பின்னணி என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
