கணேமுல்ல சஞ்சீவ கொலை : பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்
திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் சட்டத்தரணி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமரா குமாரி அபேரத்ன என்ற சட்டத்தரணியே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சந்தேகநபரை அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
தடுப்புக் காவல் உத்தரவு காலம் நிறைவடைந்ததை அடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ 2025 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 3 மணி நேரம் முன்