ஜோகன்னஸ்பர்க் நகரில் பாரிய வெடிப்புச் சம்பவம்- உயரும் பலியானோர் எண்ணிக்கை(காணொளி)
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சென்று கொண்டிருந்த எரிவாயு பாரவூர்தி வெடித்ததில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்
பாலம் ஒன்றின் அடியில் சிக்கிய அந்த பாரவூர்தியை நகர்த்த முயன்றபோது அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் படுகாயம் அடைந்தததாகவும் அந்நாட்டு ஊடகங்களின் முதல் கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
பலியானோர் எண்ணிக்கை உயர்வு
எனினும் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்தால் அந்த பாலத்தின் அருகில் இருந்த கட்டிடங்களும் சேதமடைந்ததோடு அங்கிருந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மேற்கூரை உடைந்துள்ளது.
மேலும் இரண்டு வீடுகள் மற்றும் படையில் இருந்த பல மகிழுந்துகள் என்பன சந்தர்ப்பத்தில் சேதம் அடைந்துள்ளன.
Au moins 10 morts dans l'explosion d'un camion-citerne après avoir heurté un pont à Boksburg, près de Johannesburg.
— Constantin Alain (@jeffpesos007) December 24, 2022
Des dizaines de personnes, dont des pompiers qui se trouvaient sur les lieux, ont été blessées. pic.twitter.com/j6ryvsKOaC
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அரசு அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Live at 38 Albert Street johannesburg.
— Musa Mafasa (@happybugga) June 20, 2020
Was woken up by a major explosion, a building is on fire?? pic.twitter.com/SqXHfBV9wt


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
