காசாவில் இருப்பவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் : இஸ்ரேல் அறிவிப்பு
காசா நகரில் இருப்பவர்கள் அல்லது காசா நகருக்கு திரும்பி வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இதனிடையே, வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் தொடர்ந்து அறிவுறுத்தியும் வருகிறது.
முக்கிய தளபதி பலி
இதேவேளை, இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிண்டி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் ஆயுதக்குழுவின் இராணுவப் பிரிவான அல்-குவாசம் பிரிகேட்ஸின் முக்கிய படைத்தளபதியாகச் செயல்பட்டு வந்தவர் தலால் அல் ஹிண்டி.
மத்திய காசாவில் உள்ள தலால் அல் ஹிண்டியின் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் அல் ஹிண்டி, அவரது மனைவி உட்பட 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியமான இராணுவ தளபதிகள் 6 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.