முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று மாணவி சாதனை!
வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி செல்வரத்தினம் ஹம்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூழாமுறிப்பு பகுதியில் இருந்து சென்று கல்விகற்று சாதனை படைத்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாங்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வரும் வேணாவில் கிராமத்தில் வசிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி தியாகராசா மோகனப்பிரியா கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்து மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலைப் பிரிவில் முதலாம் இடம்
புத்தளம்(puttalam) ஆராச்சிக்கட்டுவ விஜயகுபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதே ஆன சிறுமி உயரதர பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி 3 அதிவிசேட சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 16ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ விஜயகுபத பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய அவிஷா நெட்சராணி மஞ்சநாயக்க(Netsarani Manchanayake) என்ற சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |