மின்னல் தாக்கத்திற்கு இலக்காகிய ஆட்டுத்தொழுவம்..! கருகிய ஆடுகளும் - கோழிகளும்
ஞாயிற்றுக்கிழமை(25) அதிகாலை 02.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர், றஹ்மானியா பாடசாலை வீதி, எட்டாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் ஆட்டுதொழுவம் கருகி சாம்பலாகியுள்ளது.
கூலித் தொழிலாளியான இஸ்மாயில் அன்வர் என்பவர் தனது வீட்டிலேயே தொழுவம் அமைத்து, ஆடு, கோழி மற்றும் வாத்து என்பவற்றை வளர்த்து வந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய காலநிலை காரணமாக சனிக்கிழமை மாலையிலிருந்து பாரிய இடி மின்னலுடன் மழை பெய்துவருகின்றது.
பாரிய இடி மின்னல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பாரிய இடிமின்னலினால் விழுந்ததால் அன்வரின் 09 ஆடுகள், 11 பேட்டுக் கோழிகள், 04 சேவல்கள், 03 வாத்துக்கள் என்பவையே கருகி சாம்பலாகியுள்ளது.
இரு தட்டுக்களை கொண்ட தொழுவத்தில் மேல் பகுதியில் ஆடுகளும், கீழ் பகுதியில் கோழிகளும் வாத்துக்களும் தங்கியிருந்த நிலையில்தான் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
