மீண்டும் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை...!
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதனடிப்படையில், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,676.4 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 72.99 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அமைதியற்ற நிலை
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் அமைதியற்ற நிலை மற்றும் போர்ச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அத்தோடு அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்தத் திடீர் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்வடைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இது சாதாரண நுகர்வோர் மற்றும் நகை வியாபாரிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |