2000 ரூபாயினால் குறைந்துள்ள தங்க விலை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக உலக சந்தையிலும் இலங்கையிலும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (24) ஒரு பவுண் தங்கத்தின் விலை 2,000 ரூபாயினால் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாவுக்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நிலவும் தொடர்ச்சியான மோதல்களால், உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக மசகு எண்ணெய்யின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |