இலங்கையில் குறைவடைந்த தங்க விலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் இன்று (25) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி , நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4000 ரூபாயால் குறைக்கப்பட்டு 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3600 ரூபாயால் குறைக்கப்பட்டு 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,973.8 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 56.75 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்