ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : கோட்டாபயவின் மனு மீது உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக்கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை 2027 மார்ச் 05ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உயர்நீதிமன்றத்தினால் இன்று (25) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட வாதங்கள்
நீதிபதி மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கருத்தில் கொண்ட அமர்வு, மேன்முறையீட்டு மனுவை 2027 மார்ச் 05 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
வடக்கு - கிழக்கில் பொதுமக்களின் காணிகளுக்கு இன்றும் முறையான தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் குற்றச்சாட்டு
வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு வாக்களிப்பு :விடுதலைப்புலிகளுக்கு ஏற்படப்போகும் வாய்ப்பு : அபாய சங்கு ஊதும் கம்மன்பில