முடிவை மாற்றிய கோட்டாபய - குடும்பத்துடன் நாட்டை விட்டு பறந்தார்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ச, மருமகளான செவ்வந்தி ராஜபக்ச மற்றும் பேரப்பிள்ளை ஆகியோருடன் கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
முடிவை மாற்றிய கோட்டாபய

இலங்கையில் இருந்து டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், அங்கிருந்து அமெரிக்கா பயணமாக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அமெரிக்கா செல்லும் முடிவை மாற்றியுள்ள கோட்டாபய ராஜபக்ச, டுபாயில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, முன்னணி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.