இளவரசர் பிலிப்பின் மறைவிற்கு கோட்டாபய இரங்கல்
srilanka
gotabhaya
By Vasanth
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரங்கல் வெளியிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் துணைவர் பிலிப் இளவரசர் தனது 99 வயதில் இன்று இயற்கை எய்தினார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. இளவரசர் பிலிப்பின் மறைவிற்காக மகாராணி எலிசபெத் மற்றும் அரசு குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்கிறேன்.
இராணுவத்திலும், சமூக சேவைகளிலும் இளவரசர் பிலிப் ஆற்றிய அளப்பரிய தொண்டு என்றென்றும் நினைவு கூறப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்