கொழும்பில் கொட்டித் தீர்க்கும் கனமழை
நாட்டில் நிலவி வரும் சீறற்ற காலநிலையால் தலைநகரின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கொழும்பு கொட்டாஞ்சேனை , ஆமர்வீதி, மட்டக்குளிய, மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய, சபரகமுவ, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வுத் துறையால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இன்று (05) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை , நாளை (06) பிற்பகல் 03.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை நிலவுவதால், மத்திய, சபரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தீவின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இது தொடர்பாக வானிலை ஆய்வுத் துறையால் வெளியிடப்படும் எதிர்கால அறிவுரைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

