பருத்தித்துறை வைத்தியசாலை வீதியில் இவற்றுக்கு முற்றாக தடை
Sri Lanka Police
Jaffna
Jaffna Teaching Hospital
By Erimalai
மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன் உள்ள வீதியால் கனரக வாகனம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனரகவாகனம் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதான அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்துக்கமைய நேற்றைய தினம் மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரகவாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடை விதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி