பம்பல் பகிடியான வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டம்!
வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுகூட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிலையில் அங்கு சில காரசாரமான விவாதங்கள் எழுந்திருந்தன.
இன்றைய கூட்டம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது
தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை
அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கூட்டத்தில் பங்கெடுத்த மகிந்தவை தனது ஜனாதிபதி என தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து விவரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கட்டுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் மேற்குறிப்பிட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இதன்போது சில வார்த்தை மோதல்களும் ஏற்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட மகிந்தவை தனது ஜனாதிபதியாக மனதார போற்றும் அவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி “வாயை மூடு” போன்ற கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இன்றைய கூட்டத்தில் கஜேந்திரகுமார் பென்னம்பலம், அபிவிருத்தி குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா வலி.வடக்கு பிரதேச செயலாளர், தவிசாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திணைக்கிள அதிகாரிகள் காவல்துறையினர் உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |