ஹோர்முஸ் 'அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பாது! ஐ.ஆர்.ஜி.சி. பகிரங்கம்
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு மத்தியில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை ஒரு புதிய ஒழுங்கிற்கு பாரசீக வளைகுடா தயாராகி வருவதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் "ஹோர்முஸ் நீரிணை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு, அதன் முந்தைய நிலைக்கு ஒருபோதும் திரும்பப் போவதில்லை," என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தலைமையகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
ஈரானின் மீது குண்டு வீச்சு
டொனால்ட் ட்ரம்ப் , தெஹ்ரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது குண்டு வீசுவதாக அச்சுறுத்தியிருந்த நிலையில் தமது நிலைப்பாட்டை ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்டுள்ளது.

புதிய பாரசீக வளைகுடா ஒழுங்கு குறித்த ஈரானிய அதிகாரிகளின் பிரகடன திட்டத்திற்கான செயல்பாட்டுத் தயாரிப்புகளை ஐ.ஆர்.ஜி.சி கடற்படை நிறைவு செய்து வருகிறது," அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.