நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம்

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Peoples Department of Prisons Sri Lanka
By Dhilak Jul 10, 2026 01:25 PM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையொன்றைத் தொடங்கியுள்ளது.

இந்த மோதல்களுக்கு வழிவகுத்த பின்னணி, கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் மரணங்கள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணை முக்கிய கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன், சிறை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்தும் இந்த விசாரணையின் போது ஆராயப்படும் என ஆணைக்குழு இன்று(10) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

இறுதி முடிவு

தற்போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்று ஆதாரங்களைச் சேகரிக்கும் முதற்கட்டப் பணிகளே முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எதற்கும் வரவில்லை என்று ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம் | Hrcsl Conducts Investigation Prisons Incidents

எனினும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டபோது, பல கைதிகள் காயமடைந்திருப்பதும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, காயமடைந்த கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள ஆணைக்குழு, சிகிச்சைகளை திட்டமிட்டு தாமதப்படுத்துவது ஒரு வகையான பழிவாங்கலாகக் கருதப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

வெலிக்கடையில் அனுமதி மறுப்பு

இதற்கிடையில், கடந்த ஜூலை 7ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஆணைக்குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டபோது, அங்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம் | Hrcsl Conducts Investigation Prisons Incidents

இந்த அனுமதி மறுப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயல் என்றும், சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மறுநாள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஏற்பட்ட காலதாமதம் காரணமாக உரிய நேரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு பறிபோனதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை நேரில் விளக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு ஆணைக்குழு தற்போது அழைப்பாணை விடுத்துள்ளது.

அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!

அடுத்த கட்டத்தில் யோஷித மீதான ஊழல் வழக்கு! முன்னாள் காதலியின் முழுமையான வாக்குமூலம்!

கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை

கோட்டாபய - அசாத் மௌலானா சந்திப்பில் மேலும் பல தகவல்கள்! நீதிமன்றில் இரகசிய அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026