இலங்கையின் மனித உரிமைகள் நிலை -பிரிட்டன் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதம்
srilanka
human rights
united kingdom
By Vasanth
இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவிவாதத்தினை நடாத்தவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான Siobhain, McDonagh,Elliot Colburn மற்றும் Edward Davey ஆகியோர் விவாதத்தை கோரியுள்ளனர் என அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.