டெஸ்ட் உலக கோப்பை இறுதிப் போட்டி - புள்ளிப்பட்டியலில் முன்னேறிய இந்தியா
பங்களாதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், உலக டெஸ்ட் போட்டி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பங்களாதேச அணியுடனான தொடர் வெற்றியின் மூலமாக, இந்திய அணி டெஸ்ட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தக்கவைத்து கொண்டுள்ளது.
டெஸ்ட் உலக கோப்பை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இறுதிப்போட்டி
2 ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் பெரும் வெற்றியின் சதவீதத்தின் அடிப்படையில், முதல் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில், உலக கோப்பை 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2021ல் அணிகள் பெற்ற அதிகபட்ச வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே இறுதிப்போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்த ஆண்டு டெஸ்ட் உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இதற்காக உலகின் முன்னணி துடுப்பாட்ட அணிகள் தயாராகி வந்த நிலையில், பங்களாதேசத்திற்கு எதிரான துடுப்பாட்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
