பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் அவர் சிறையில் உள்ளார்.
இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இதற்கிடையே தோஷகானா வழக்கில் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
தோஷகானா வழக்கில்
அதாவது உயர் பதவியில் உள்ளவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோர் வழங்கும் பரிசு பொருட்களை, 'தோஷகானா' எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது பாகிஸ்தானிய சட்டங்களில் ஒன்றாகும்.
அவ்வாறு ஒப்படைத்த சில பொருட்களை, இம்ரான் கான் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளியே விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில், நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான், கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையின்
இதனைதொடர்ந்து, உடல்நலத்தை கருத்தில் கொண்டு,சிறப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும் படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் பின்னர், நேற்று முன் தினம் (09.25) அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்த அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்தை தொடர்ந்து தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்ற காவலில்
இதன்படி ஒக்டோபர்10ஆம் திகதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி முகமது குரேஷிக்கும் நீதிமன்றம் காவலை நீடித்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.