வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! தடை செய்யப்படவுள்ள வாகனங்கள்
வருமான அனுமதிப்பத்திரம்
இலங்கையில் உள்ள வாகனங்களில் வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி 05 வருடங்களுக்கு அதிக காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
23 இலட்சம் வாகனங்கள் தடை
இதேவேளை, பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        