விடுதலைப் புலிகளின் மீளுருவாக்க கைதுகளை சிறிலங்காவுக்கு அறிவிக்காத இந்தியா!
By pavan
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு ஏற்கனவே இன்டர்போலின் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
திருச்சிராப்பள்ளியில் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மையென்றாலும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினருக்கு இதுவரை இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் குணா என்ற சி குணசேகரன் மற்றும் பூக்குட்டி கண்ணா என்ற புஸ்பராஜா ஆகியோர் அடங்குகின்றனர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி