யாழில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வுகள்
Jaffna
India's Republic Day
Sri Lanka
India
By Sathangani
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டார்.
குடியரசுத் தலைவரின் சிறப்புரை
இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தளித்தார்.
அதனைத் தொடர்ந்து பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்திய குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள், இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்